/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தவிப்பு
/
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தவிப்பு
ADDED : டிச 29, 2025 07:34 AM
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியகுளத்துப்-பாளையம் வாரச்சந்தை நடக்கும் பகுதியில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகு-தியில் இருந்து பெரியகுளத்துப்பாளையம் செல்லும் சாலையோரம், ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. கரூர், வெங்க-மேடு, குளத்துப்பாளையம், வாங்கப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது-மக்கள் இந்த வாரச்சந்தைக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். வாரச்சந்தை நடைபெறும் சாலையில், வெங்க-மேடு பகுதியில் இருந்து இனாம் கரூர், குளத்துப்-பாளையம், பெரியகுளத்துப்பாளையம், சேலம் பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்கிறது. வாரந்தோறும் வாகன போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கின்றனர். சந்தை நடந்த, நேற்று கூட வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்த பகுதியை கடந்து சென்றன.
எனவே, வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்-கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

