/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெல் விதை தேர்வு செய்முறை விளக்கம்
/
நெல் விதை தேர்வு செய்முறை விளக்கம்
ADDED : டிச 29, 2025 07:27 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தண்ணீர்பள்ளி கிரா-மத்தில், முசிறி தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவியர் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், நெல் விதை தேர்வில் முட்டை மிதக்கும் தொழில்நுட்ப செய்-முறை குறித்து விளக்கமளித்தனர்.
இந்த முறை என்பது, நெல் விதைகளை தேர்வு செய்ய, உப்பு நீர் கரைசலில் முட்டையை மிதக்க வைத்து, அந்த உப்பு நீரில் நெல் விதைகளை போடும்போது, எடை குறைந்த, தரமற்ற, பூச்சி தாக்கிய விதைகள் மேலே மிதக்கும்; நல்ல, கன-மான, தரமான விதைகள் தண்ணீரில் மூழ்கும். மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு, மூழ்கிய விதைகளை விதைப்புக்கு பயன்படுத்துவது அதிக விளைச்சலை தரும். இது ஒரு பாரம்பரிய விதை தேர்வு முறையாகும். இதில், வேளாண் அலு-வலர், தோட்டக்கலை அலுவலர், விதை அலு-வலர் என, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்-துகொண்டனர்.

