/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டோல்கேட் சுகாதார வளாகம் மூடப்பட்டதால் பொது மக்கள் அவதி
/
டோல்கேட் சுகாதார வளாகம் மூடப்பட்டதால் பொது மக்கள் அவதி
டோல்கேட் சுகாதார வளாகம் மூடப்பட்டதால் பொது மக்கள் அவதி
டோல்கேட் சுகாதார வளாகம் மூடப்பட்டதால் பொது மக்கள் அவதி
ADDED : மே 18, 2025 06:53 AM
கிருஷ்ணராயபுரம்: மணவாசி டோல்கேட் அருகில் உள்ள, சுகாதார வளாகம் திறக்-காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணவாசி அருகில் டோல்கேட் உள்ளது. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மணவாசி டோல்கேட் நிர்வாகம் சார்பில், இரண்டு சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதை வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றிதிறக்காமல் மூடப்பட்டுள்ளது. இதனால் கரூர், திருச்சி செல்லும் வாகன ஓட்டிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்-டுள்ளனர்.
எனவே, சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, டோல்கேட் நிர்வாகம் முன்வர வேண்டும்.