ADDED : நவ 21, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 52வது ஆண்டு
திருப்புகழ் படி பூஜை விழா, வரும், 29 ல் நடக்கிறது.
கரூர் கல்யாண
பசுபதீஸ்வரர் கோவில் முன்பிருந்து, வரும், 29 காலை ஸ்ரீ சஷ்டி குழு
சார்பில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம், காவடி ஏந்தி
வெங்கமேடு வழியாக ஊர்வலமாக வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி
கோவிலுக்கு செல்கின்றனர். பின், திருப்புகழ் மற்றும் தேவாரம்
பாடப்பட்டு படி பூஜை நடக்கிறது.தொடர்ந்து, பாலசுப்பிரமணி
சுவாமி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
பின், பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை,
கரூர் ஸ்ரீ சஷ்டி குழுவினர் செய்து வருகின்றனர்.
