/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிழற்கூடம் இல்லாத புலியூர் பஸ் ஸ்டாப்
/
நிழற்கூடம் இல்லாத புலியூர் பஸ் ஸ்டாப்
ADDED : ஏப் 29, 2024 07:16 AM
கரூர் : கரூர் அருகே, நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், நிழற்கூடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து, திருச்சி சாலையில் உள்ளது. அதில், தனியார் சிமென்ட் ஆலை, பொறியியல் கல்லுாரி, அரசு, தனியார் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், புலியூரில் இருந்து திருச்சி, கரூர் மற்றும் மணப்பாறை பகுதிகளுக்கு பொது மக்கள் நாள்தோறும் பஸ்சில் சென்று வருகின்றனர். ஆனால், புலியூரில் இரண்டு பக்கமும் உள்ள, பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை.
கரூர் மாவட்டத்தில், கோடை வெயில் தாக்கம் அதிகமுள்ள நிலையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், புலியூரில் பஸ் ஸ்டாப்புகளில், நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள் மழை வரும் போதும், வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள போதும், பஸ்கள் வரும் வரை அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் புகும் அவல நிலை உள்ளது. எனவே, கரூர் - திருச்சி சாலை புலியூரில் இரண்டு பக்கமும் உள்ள, பஸ் ஸ்டாப்புகளில் பயணிகள் நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
எம்.எல்.ஏ., கண்டு கொள்வாரா?புலியூர் டவுன் பஞ்சாயத்து, கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் உள்ளது. அதில், கடந்தாண்டு தி.மு.க., சார்பில், வெற்றி பெற்ற சிவகாமசுந்தரி, புலியூர் பஸ் ஸ்டாப்பில், இரண்டு பக்கமும் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

