/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வினாடி - வினா நிகழ்ச்சி
/
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வினாடி - வினா நிகழ்ச்சி
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வினாடி - வினா நிகழ்ச்சி
டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வினாடி - வினா நிகழ்ச்சி
ADDED : நவ 09, 2025 04:02 AM
கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவ-னத்தின், காவேரி அரங்கத்தில், 'கற்போம்; கற்பிப்போம்-' என்ற வினாடி-வினா நிகழ்ச்சி நடந்தது. காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், சந்தீப் சக்சேனா தலைமை வகித்தார்.
இங்கு, 'காகித ஆலையின் பணி-யாளர்களுக்கும் கற்போம் கற்பிப்போம்--2025' என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி நடந்தது. முதல் சுற்றில் வெற்றிபெற்ற, 12 அணிகள், இரண்டாம் சுற்று வினாடி வினா போட்டியில் கலந்-துகொண்டனர். இரண்டாம் சுற்றின் முடிவில், ஆறு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. இந்த, ஆறு அணிகளுக்-கிடையே இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், கோப்பை வழங்கப்பட்-டது. நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர்(மனிதவளம்) கலைச்செல்வன், செயல் இயக்குனர்(இயக்கம்) யோகேந்திர குமார் வர்சனே உள்பட பலர் பங்கேற்றனர்.

