ரயில்வே வாரியம்- சார்பில் தேர்வு இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு
ரயில்வே வாரியம்- சார்பில் தேர்வு இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு
UPDATED : அக் 27, 2026 07:57 AM
ADDED : அக் 27, 2026 05:25 AM

கரூர்: ரயில்வே தேர்வு வாரியம்- தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புக்கு நவ., 9 அன்று பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர், வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயி-லாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு, இலவசமாக நடத்தப்பட்டு வரு-கின்றன. தற்போது ரயில்வே தேர்வு வாரியம்- சார்பில், காலி பணியிடங்களுக்க தேர்வு நடக்கி-றது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் சேர விரும்பும் மனு-தாரர்கள், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம், தேர்-வுக்கு விண்ணப்பித்த நகல், ஆதார்அட்டை நக-லுடன் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில், நவ.,9 அன்று பதிவு செய்து கொள்ளலாம்.
சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம் வழியில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு-தேர்வு, வாராந்திர தேர்வுள், இணையவழி தேர்வு, முழு மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் விபரம் பெற, 04324 -223555, 63830 50010, 63743 19939 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
