ADDED : நவ 20, 2026 03:58 AM

அரவக்குறிச்சி:மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சின்ன
தாராபுரத்தில்
விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பயணிகள் மாளிகையில் இருந்து
தொடங்கிய பேரணி, கடைவீதி வழியாக சென்று பஸ் ஸ்டாண்டில்
நிறைவடைந்தது. பேரணியில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம்,
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் அவசியம், மழைநீரை வீணாக்காமல்
சேமித்து பயன்படுத்த வேண்டியதன் நோக்கம் உள்ளிட்டவை குறித்து,
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மண்டல துணை
வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில், ஊராட்சி தனி அலுவலர் ஆறுமுகம் மற்றும் ஊர் மக்கள்
கலந்து கொண்டனர். தொடர்ந்து, மழைநீரை முறையாக சேகரித்து
பாதுகாப்பதுடன், நீர்வளத்தை வீணாக்காமல் பயன்படுத்தி, நிலத்தடி
நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு ஒத்துழைப்போம் என, அனைவரும்
உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
