/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி சடலத்துடன் உறவினர்கள் மறியல்
/
மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி சடலத்துடன் உறவினர்கள் மறியல்
மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி சடலத்துடன் உறவினர்கள் மறியல்
மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி சடலத்துடன் உறவினர்கள் மறியல்
ADDED : அக் 26, 2025 12:58 AM
குளித்தலை, நெய்தலுார் காலனி மயானத்தில், அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குளித்தலை அடுத்த தோகைமலை யூனியன், நெய்தலுார் பஞ்., பெரிய படையூர், கல்லடிகளம், நெய்தலுார் காலனி அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமங்களில் வசித்து வரும் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மயானம் பெரிய பனையூரில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எரிமேடை சிமென்ட் பூச்சுகள் கொட்டியும், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதலமடைந்துள்ளது.
மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், சுற்றுச்சுவர் அமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மூன்று கிராம மக்கள் சார்பில் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.இந்நிலையில் நேற்று காலை சத்துணவு அமைப்பாளர் மோகன் குமார், 57, மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்லும் வழியில் காவல்காரன்பட்டி-- நங்கவரம் நெடுஞ்சாலை பெரிய பனையூரில், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது. கிராம முக்கியஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், முறையாக மயானத்திற்குரிய அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, மீண்டும் தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைப்போம். செயல்படுத்தாத பட்சத்தில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

