/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்
/
வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்
வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்
வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் அரிசி மூட்டைகள் திருட்டு புகார்
ADDED : நவ 17, 2025 03:46 AM
கரூர்: கரூர், வஞ்சுலேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, அரிசி மூட்-டைகளை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கரூர், அமராவதி ஆற்றுப்பகுதியில் வஞ்சுலேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அதில், அன்னாபிஷேக விழாவுக்காக, கடந்த, 5ல் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட அரிசி மூட்டைகள், மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. இந்நி-லையில், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த
போது கடந்த, 5 இரவு, 11:00 மணிக்கு அரிசி மூட்டைகளை சில நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால், அரிசி மூட்டை-களை திருடி சென்றவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.