/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
/
அரவக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
ADDED : மே 02, 2025 02:10 AM
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சியில், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள விளையாட்டு வீரர்களுக்கென மைதானம் இல்லை. அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, மைதானத்தை மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மைதானம் இல்லாததால் தனியார் தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு சென்று இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். இதே போல வயதான முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதினர், சர்க்கரை நோய் உள்ளவர்கள், காலை நடை பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு மைதானம் இல்லாததால், பொது சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்போது சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. ஆகவே, அரவக்குறிச்சியில் புதிய விளையாட்டு மைதானமோ அல்லது அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை பொது பயன்பாட்டிற்கோ அளிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

