/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் கம்பி அறுத்து விழுந்தால் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
/
மின் கம்பி அறுத்து விழுந்தால் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
மின் கம்பி அறுத்து விழுந்தால் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
மின் கம்பி அறுத்து விழுந்தால் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
ADDED : அக் 15, 2024 03:06 AM
மின் கம்பி அறுத்து விழுந்தால்
தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
கரூர், அக். 15--
'மின் கம்பம் சாய்ந்தால், மின் கம்பி அறுந்து விழுந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்' என, கரூர் மின்வாரிய மேற்பார்வைபொறியாளர் அசோக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் சம்மந்தமாகவோ, மின்சாரம் தடை, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பி அறுந்து விழுந்தால் தங்களது பகுதிகளில் உள்ள பிரிவு அலுவலகம், உபகோட்டம், கோட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம். மேலும், 24 மணி
நேரமும் செயல்படும் மின்னகம் மொபைல் எண் 94987 94987க்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.