/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராணி மங்கம்மாள் சாலையை இருவழியாக அமைக்க கோரிக்கை
/
ராணி மங்கம்மாள் சாலையை இருவழியாக அமைக்க கோரிக்கை
ADDED : நவ 16, 2025 02:16 AM
குளித்தலை:தமிழக முதல்வருக்கு, காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியி-ருப்பதாவது:
கரூர் மாவட்டம் புலியூரில் இருந்து சிந்தலவாடி, பிள்ளப்பா-ளையம், கோட்டைமேடு, மேட்டுமருதுார், தேவஸ்தானம், நங்க-வரம், குழுமணி வழியாக திருச்சி மாவட்டம், உறையூர் வெக்-காளியம்மன் கோவில் வரை, ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில், சிந்தல-வாடியில் இருந்து கோட்டைமேடு, மேட்டுமருதுார், நங்கவரம் வரை ஒரு வழிச்சாலையாக உள்ளது. எனவே இந்த பகுதி-யையும், இருவழி சாலையாக மாற்றி தடையில்லா போக்குவரத்து வசதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோல் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உறுதி செய்யப்பட்ட மருதுார் காவிரி ஆற்றில், கதவணை திட்டத்தை நடப்பு தி.மு.க., ஆட்சியில் ரூ.750 கோடி மதிப்பில் கதவணை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் நிதியின்மையால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
அதே இடத்தில் தமிழக அரசு கதவணை அமைத்து குளித்தலை, தொட்டியம், மண்ணச்சநல்லுார், ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்ட-சபை தொகுதிகளுக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் விவசாயத்திற்கு தடையில்லா தண்ணீர் வசதி கிடைக்கும் வகையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

