/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆக்கிரமிப்பை அகற்றி தடுப்பு அமைக்க கோரிக்கை
/
ஆக்கிரமிப்பை அகற்றி தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : நவ 05, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, : குளித்தலை நகராட்சியின் முக்கிய தெருக்களில் கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து தொழில் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பால், சாலையில் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் மணத்தட்டை, சுங்ககேட் ரயில் பாதை, மணத்தட்டை, பஸ் ஸ்டாண்ட், பெரிய பாலம் வரையிலுள்ள ஆக்கிரமிப்புகளையும், காந்தி சிலையிலிருந்து ரயில்வே நிலைய சாலை, மாரியம்மன் கோவில் செல்லும் தார்ச்சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமான தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

