/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடியிருப்பு வழியாக உயர் மின் அழுத்த கம்பி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுகோள்
/
குடியிருப்பு வழியாக உயர் மின் அழுத்த கம்பி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுகோள்
குடியிருப்பு வழியாக உயர் மின் அழுத்த கம்பி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுகோள்
குடியிருப்பு வழியாக உயர் மின் அழுத்த கம்பி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுகோள்
ADDED : அக் 26, 2025 12:46 AM
கரூர்,குடியிருப்புகள் வழியாக, உயர் மின் அழுத்த கம்பி கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என, க.பரமத்தி அருகேயுள்ள கூனம்பட்டி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
க.பரமத்தி அருகில், கூனம்பட்டி படத்தியார் தோட்டம் கிராமத்தில், 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, மின்வாரியம் சார்பில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் கிராமம் அருகில் உள்ள, மொஞ்சனுாரில் தனியார் நிறுவனம் காற்றாலையில் இருந்து, 33,000 வோல்ட் மின்சாரத்தை, குடியிருப்பு பகுதி வழியாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புதுப்பையில் உள்ள மின் சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதற்காக, உயர் மின் அழுத்த கம்பி அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில், வீடு கட்டுமான பணி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். உயர் மின் அழுத்த கம்பியில், மின் கசிவு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடத்திய பேச்சுவார்த்தையின் போது, குடியிருப்பு இல்லாத இடத்தில், மின் கம்பிகள் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில், குடியிருப்பு வழியாக மின் கம்பி அமைக்கும் பணி நடக்கும் என்றும், அதனை மீறி தடுத்தால் கைது செய்வோம் என, நேற்று முன்தினம் போலீசார் எச்சரித்து சென்றுள்ளனர். மிரட்டல் விடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதோடு, குடியிருப்பு இல்லாத வழியாக உயர் மின் அழுத்த கம்பி கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

