/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் அன்னதான பொருட்கள் திருடிய இருவருக்கு காப்பு
/
கோவில் அன்னதான பொருட்கள் திருடிய இருவருக்கு காப்பு
கோவில் அன்னதான பொருட்கள் திருடிய இருவருக்கு காப்பு
கோவில் அன்னதான பொருட்கள் திருடிய இருவருக்கு காப்பு
ADDED : நவ 09, 2025 03:47 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த துலக்கம்பாறை செல்லாண்டியம்மன் கோவிலில், அன்னதான பொருட்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரவக்குறிச்சி அடுத்த துலக்கம்பாறையில், செல்லாண்டி-யம்மன் கோவில் உள்ளது. கடந்த வாரம் இந்த கோவில் கும்பாபி-ஷேகம் விழா நடந்தது. இதை முன்னிட்டு, அன்னதானத்திற்காக தற்காலிக சமையல் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அரிசி மூட்டைகள், டேபிள், சேர் போன்ற பொருட்கள் காணாமல் போனது. இது குறித்து, கோவில் தர்மகர்த்தா சம்பத்குமார், சின்ன-தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், சின்-னதாராபுரம் அருகே வேட்டையார் பாளைத்தை சேர்ந்த முருகவ-டிவேல், 42, காளிமுத்து, 49, ஆகிய இருவரும் இணைந்து, இரு-சக்கர வாகனத்தில் வைத்து பொருட்களை திருடியது தெரியவந்-தது. இருவரையும் சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து, 5,000 ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டை, 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டேபிள், சேர்களை பறிமுதல் செய்தனர்.

