தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


ADDED : ஜூலை 10, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டம், காக்காவாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி கலையரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசியதாவது:

மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு திட்டப் பணியும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், உயர்தரத்துடன் நிறைவேற்ற வேண்டும். பணிகளில் தாமதம் ஏற்படாமல், அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீர்நிலைகளை பாதுகாத்து மழைநீர் சேமிப்பை அதிகரிக்கும் வகையில், பணிகளை தீவிரப்

படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில், பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் விஜயலஷ்மி, கலெக்டர் முத்துக்குமரன்,

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தனசேகரன் உள்பட பலர்

பங்கேற்னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us