ADDED : நவ 08, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
கரூர்:தீபாவளி பண்டிகையையொட்டி, கரூர் பூ மார்க்கெட்டில், பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
சேலம்,
கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு
மாவட்டங்களில் இருந்து மல்லிகை உள்ளிட்ட பூக்கள், கரூர் பூ
மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. தீபாவளி
பண்டிகையையொட்டி, கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பூ
மார்க்கெட்டில், நேற்று பூக்கள் விலை அதிகரித்தது.
கடந்த மாதம்,
800 ரூபாய் வரை விற்ற மல்லிகை பூ, ஒரு கிலோ, நேற்று 1,600 ரூபாய் வரை
விற்றது. அதேபோல், முல்லை பூ, 600 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாய்,
ரோஜா, 200 ரூபாயில் இருந்து, 250 ரூபாய், செவ்வந்தி பூ, 250 ரூபாயில்,
350 ரூபாய், அரளி பூ, 80 ரூபாய், சம்பங்கி, 150 ரூபாய்க்கு விற்றது.
