/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் சாலையின் தரம் ஆய்வு
/
அரவக்குறிச்சியில் சாலையின் தரம் ஆய்வு
ADDED : நவ 21, 2025 01:47 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், சாலையின் தரத்தையும் மரக்கன்றுகள் நடும் பணியையும், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.கரூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்குட்பட்ட, மாவட்ட முக்கிய சாலையான அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலை வரை, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2023-24ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தல் பணி முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் சாலையின் தரத்தை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட முக்கிய சாலையான, சின்னதாராபுரத்தில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில், கண்காணிப்பு பொறியாளர் விஸ்வநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கோட்ட பொறியாளர் ரவிக்குமார், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கர்ணன் மற்றும் உதவி பொறியாளர் வினோத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

