ADDED : அக் 11, 2025 12:56 AM
கரூர், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் செவிந்தி லிங்கம் தலைமையில், கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையிலான வேலை வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும், மாநில நெடுஞ்சாலைகளை அரசே பராமரிக்க வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மண்டல செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சிவக்குமார், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் செல்வராணி, பொன்ஜெயராம் உள்பட பலர் கண், காது, வாய் ஆகியவற்றை மறைத்து கொண்டு
பங்கேற்றனர்.