/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ. 26.95 லட்சத்துக்கு கொப்பரை, எள் ஏலம்
/
ரூ. 26.95 லட்சத்துக்கு கொப்பரை, எள் ஏலம்
UPDATED : நவ 19, 2024 07:01 AM
ADDED : நவ 19, 2024 01:48 AM
கரூர் : சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 26.95 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் தேங்காய்களை, நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்கின்றனர்.
நேற்று நடத்த ஏலத்தில், 6,276 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 40.19 ரூபாய், அதிகபட்சமாக, 46.50 ரூபாய், சராசரியாக, 44.05 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,897 கிலோ எடையுள்ள தேங்காய்கள். 80 ஆயிரத்து, 476 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 406 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 134 ரூபாய், அதிகபட்சமாக, 144.69 ரூபாய், சராசரியாக, 142.29 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 96.69 ரூபாய், அதிகபட்சமாக, 140.49 ரூபாய், சராசரியாக, 122.47 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 21 ஆயிரத்து, 624 கிலோ கொப்பரை தேங்காய், 25 லட்சத்து, 77 ஆயிரத்து, 76 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
எள் நான்கு மூட்டை வரத்தானது. ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 117.99 ரூபாய், அதிகபட்சமாக, 130.39 ரூபாய், சராசரியாக, 128.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 299 கிலோ எடையுள்ள எள், 37 ஆயிரத்து, 949 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து 26 லட்சத்து, 95 ஆயிரத்து, 501 ரூபாய்க்கு விற்பனையானது.