ADDED : ஜூலை 19, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,கரூர் அருகே, வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த, அறிவழகன் என்பவரது மகன் பூபதி, 28; மெக்கானிக். இவர் கடந்த, 16ல் வேலைக்கு செல்வதாக, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் பூபதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை அறிவழகன், போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.