sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

/

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : செப் 23, 2024 04:41 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்-தது.

நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்மர், நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லால் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்றபடி வணங்கிய நிலையில், சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்-பாலிக்கிறார். இங்கு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருடப்பிறப்பு, தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.அதன்படி, புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு, 1,008 வடை மாலை அலங்-காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்-தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்-பட்டு, மகா தீபாராதனை நடந்தது. புரட்டாசி ஞாயிறு என்பதால், வழக்கத்தை விட நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us