/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேப்ளாப்பட்டி, குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
சேப்ளாப்பட்டி, குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சேப்ளாப்பட்டி, குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சேப்ளாப்பட்டி, குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 22, 2025 01:30 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, சேப்ளாப்பட்டி கோவில் முன் நடந்த, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ
தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலர் அண்ணாதுரை, மாஜி பஞ்., தலைவர்கள் முதலைப்பட்டி மணிகண்டன். சேப்ளாப்பட்டி விமலா, தாசில்தார் இந்துமதி, யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பெட்டகம், 10 விவசாயிகளுக்கு பயிர் கடன் காசோலை, இலவச வீட்டுமனை பட்டா , வேளாண்மை துறை மூலம் காய்கறி விதை, சோளம் பை ஆகியவைகளை எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கி அரசின் சாதனைகள் குறித்து பேசினார். இதேப்போல், குளித்தலை நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் சகுந்தலா, கமிஷனர் நந்தகுமார், பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் கவுன்சிலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.