தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/புள்ளி இயல் சார்நிலை அலுவலர் கோரிக்கை அட்டையுடன் பணி

புள்ளி இயல் சார்நிலை அலுவலர் கோரிக்கை அட்டையுடன் பணி

புள்ளி இயல் சார்நிலை அலுவலர் கோரிக்கை அட்டையுடன் பணி


ADDED : நவ 14, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:தமிழ்நாடு அரசு புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில், ஊழியர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்று, புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர், கோரிக்கை அட்டை அணிந்து கொண்டு, பணியில் ஈடுபடுவது என முடிவு செய்திருந்தனர். அதன்படி, கரூர் மாவட்டத்தில் நேற்று, புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதில், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட, கோட்ட, வட்டாரங்களுக்கு புதிய பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும், புள்ளியியல் உதவி ஆய்வாளர்களுக்கு விதி தளர்வு வழங்கி, பத வி உயர்வு வழங்க வேண்டும், புள்ளியல் ஆய்வாளர் பணியிடத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us