/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'டேஞ்சர் லைட்' இல்லாத வாகனங்களால் ஆபத்து விபத்தை தடுக்க கடும் நடவடிக்கை தேவை
/
'டேஞ்சர் லைட்' இல்லாத வாகனங்களால் ஆபத்து விபத்தை தடுக்க கடும் நடவடிக்கை தேவை
'டேஞ்சர் லைட்' இல்லாத வாகனங்களால் ஆபத்து விபத்தை தடுக்க கடும் நடவடிக்கை தேவை
'டேஞ்சர் லைட்' இல்லாத வாகனங்களால் ஆபத்து விபத்தை தடுக்க கடும் நடவடிக்கை தேவை
ADDED : டிச 30, 2025 05:24 AM
கரூர்: லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களின் பின்னால் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில், மதுரை சேலம், கரூர் திருச்சி, கரூர் கோவை ஆகிய தேசிய நெடுஞ் சாலைகளில் செல்கிறது. இங்கு, அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை (ஹாட்ஸ்பாட்) கண்டறிந்து, விபத்தை குறைப்பதற்கு, உயர்மட்ட பாலம், சாலை தடுப்பு போடுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விபத்து நடந்த இடங்களில் அபாய எச்சரிக்கை வரைந்து வாகன ஓட்டிகள் மெதுவாக, கவனமாக செல்ல, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மதுரை சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் புகழூர் செம்படாபாளையத்தில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கரும்புகளை ஏற்று கொண்டு டிராக்டர் அதிகம் செல்கின்றன. டிராக்டர்களில் பின்னால் சிவப்பு விளக்குகள் இல்லாமல், அதிகம் பாரம் ஏற்றி கொண்டு செல்கிறது. அப்படி பல வாகனங்களில் சிவப்பு விளக்கு இருந்தும், அவை எரிவதில்லை. ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களும் இல்லை.
இரவில் முன்னால் செல்லும் இந்த, வாகனங்கள் இருட்டில் தெரிவதில்லை. பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகிறது. கடந்த, மே 17ல் மதுரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்மடை பிரிவு அருகில் முன்னாள் சென்ற டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதி நிலை தடுமாறி வேன் மீது மோதி விபத்தில், 5 பேர் இறந்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகள், சாலை பாதுகாப்பு வார விழாவின் போது முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டி, 'போஸ்' கொடுப்பதோடு சரி. இது குறித்து கண்டு கொள்வதில்லை. இதை தவிர்த்து லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களின் பின்னால் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தாமல் வருபவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

