/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நான்கு மையத்தில் நீட் தேர்வு தீவிர சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி

ADDED : மே 05, 2025 02:08 AM
கரூர்: கரூரில், நான்கு மையங்களில் நீட் தேர்வை, 1,596 மாணவ, மாணவியர் தீவிர சோதனைக்கு பின் எழுதினர்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்
கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்பு கள் மற்றும் கால்நடை மருத்-துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இதில், கரூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடந்தது. கரூர் தான்தோன்றிமலை அரசு
கல்லுாரியில் (இரண்டு மையங்கள்), 960 பேரும், கரூர் வெள்ளி-யணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 299 பேரும், கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 337 பேரும் என மொத்தம், 1,596 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
அதன்படி தேர்வு மையத்திற்குள் செல்ல காலை, 11:30 மணி முதல் மாணவ-, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், தீவிர சோதனைக்கு பின் மாணவ, மாணவியர் தேர்வு அறைக்குள் அனு-மதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்திற்கு முன்பாக பந்தல்கள் அமைக்கப்படாததால், மாணவ, மாணவியர் அங்குள்ள மர நிழல்களில் காத்திருந்து உள்ளே சென்றனர். மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதி-கமாக இருந்ததால் மாணவ, மாணவியர், பெற்றோர் கடும் அவ-திப்பட்டனர்.