/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கிருஷ்ணராயபுரத்தில் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கிருஷ்ணராயபுரத்தில் ஆய்வு
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கிருஷ்ணராயபுரத்தில் ஆய்வு
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கிருஷ்ணராயபுரத்தில் ஆய்வு
ADDED : ஆக 29, 2024 07:46 AM
கிருஷ்ணராயபுரம்: கரூர் கலெக்டர் தங்கவேல், நேற்று கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த நிலவரங்களை, நேரில் ஆய்வு செய்தார்.
கோவக்குளம், அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படுத்தப்படும் கண் அறுவை சிகிச்சை மையத்தின் செயல்பாடுகள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சித்தலவாய் பஞ்சாயத்து முனையனுார் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு மற்றும் உணவுகளை ஆய்வு செய்து தரமான முறையில் சமைத்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.