/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ
/
தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ
ADDED : ஆக 23, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, சர்க்கரை ஆலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், புகழூர் அருகே செம்பாடம்பாளையத்தில், தனியார் சர்க்கரை ஆலை செயல்படுகிறது. அதில், நேற்று கரும்பு சக்கை கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில், திடீரென தீ பிடித்து எரிந்தது.
அப்போது, ஆலையில் இருந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் தீயை அணைக்க முடிய வில்லை. இதையடுத்து, புகழூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால், செம்பாடம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் புகைமூட்டம் ஏற்பட்டது.