/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை முன் கரும்பு ஜூஸ், குளிர்பானம் விற்பனை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
கரூர் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை முன் கரும்பு ஜூஸ், குளிர்பானம் விற்பனை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கரூர் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை முன் கரும்பு ஜூஸ், குளிர்பானம் விற்பனை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கரூர் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை முன் கரும்பு ஜூஸ், குளிர்பானம் விற்பனை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : டிச 04, 2024 06:46 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் புதியதாக திறக்கப்பட்ட கழிப்பறை முன் கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. கழிவறைக்கு செல்லும் பாதையை மறைத்து கடைவிரித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து கோவை, நாகை, மதுரை, கன்னியா-குமரி, சேலம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் கரூர் வழியாக இரவில் அதிக பஸ்கள் செல்கின்றன. நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும், நெருக்கடி மிகுந்த கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநக-ராட்சி சார்பில் சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தின் எதிரில், 31 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டண கழிப்பறை சமீபத்தில் திறக்கப்பட்டது.
மொத்தம், 8 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்க ப்பட்டுள்ளது. அந்த கழிப்பறை வளாகம் முன், கழிப்பறைக்கு செல்லும் பாதையை மறைத்து அந்த ஒப்பந்ததாரர் வாயிலாக, பழக்கடை, கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில் விற்பனை செய்கின்றனர். சுகாதார கேடான இடத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
கழிப்பறை முன் கடை விரிக்கப்பட்டுள்ள கடையில் பொருட்கள் விற்பனை கனஜோராக நடக்கிறது. கழிப்பறை முன்பு உணவு பொருட்கள் விற்பனை செயவதால், அதன் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது தெரிந்தும், உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கழிப்பறை முன் வைக்கப்பட்டுள்ள கடையை அகற்றவும், அந்த இடத்தில் மீண்டும் கடை விரிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.