திறந்த நிலையில் சுவிட்ச் போர்டு: மக்களுக்கு காத்திருக்கு ஆபத்து
திறந்த நிலையில் சுவிட்ச் போர்டு: மக்களுக்கு காத்திருக்கு ஆபத்து
ADDED : ஜூலை 26, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த மாயனுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே சிமென்ட் சாலை உள்ளது. இப்பகுதி
மக்கள் பயன்பாட்டிற்கு, போர்வெல் அமைத்து சின்டெக்ஸ் தொட்டியில்
தண்ணீர் ஏற்றப்பட்டது.
தற்போது போர்வெல் பழுது காரணமாக, சின்டெக்ஸ்
தொட்டியில் நீர் ஏற்றாமல் கிடப்பில் உள்ளது. மேலும் சின்டெக்ஸ்
தொட்டி, போர்வெல் மின் மோட்டாருக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு
சுவிட்ச் போர்டில் சேதம் ஏற்பட்டு திறந்த நிலையில் உள்ளது.சுவிட்ச்
போர்டு பகுதியில் தெரியாமல் கை வைத்தால், மின்சாரம் தாக்கும் அபாயம்
உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி, சுவிட்ச் போர்டை சரி செய்து
பாதுகாப்புடன் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
