/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் வாகனங்கள் சுற்றி வரும் அவலம்
/
நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் வாகனங்கள் சுற்றி வரும் அவலம்
நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் வாகனங்கள் சுற்றி வரும் அவலம்
நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் வாகனங்கள் சுற்றி வரும் அவலம்
ADDED : மார் 03, 2024 01:11 AM
அரவக்குறிச்சி;அரவக்குறிச்சியில் இருந்து, கணக்குப்பிள்ளை புதுார் பிரிவுக்கு செல்பவர்கள், காமக்காப்பட்டிக்கு பிரிந்து செல்லும் சாலையில் சென்டர் மீடியன் உள்ளதால், நேரே செல்ல முடியாமல் 3 கி.மீ., சுற்றி செல்லும் நிலையில் உள்ளனர். இவ்வழியை அரவக்குறிச்சியில் இருந்து தினசரி வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மேலும் எதிர் திசையில் வாகனங்கள் வருவதால், விபத்துக்களுடன் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. நான்கு முனை சாலை சந்திக்கும் இந்த இடத்தில், ஏற்கனவே இருந்தது போல பாதை ஏற்படுத்தி தர வேண்டுமென, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.