/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டுக்குள் பதுங்கிய சாரை பாம்பு உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

ADDED : மார் 06, 2024 02:24 AM
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, வீட்டில் பதுங்கிய சாரை பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
கரூர்
மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, கந்தம்பாளையம் முல்லைநகர்
பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 47; இவரது வீட்டில் நேற்று
மதியம், ஆறு அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. சண்முக சுந்தரம்
மற்றும் அருகில் இருந்தவர்கள் பாம்பை விரட்டினர். ஆனால், பாம்பு வீட்டை
விட்டு வெளியேறாமல் பதுங்கியது. இதையடுத்து, சண்முக சுந்தரம்,
வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு
அலுவலர் சரவணன் தலைமையில் சென்ற வீரர்கள், சாரை பாம்பை உயிருடன்
பிடித்து, மலைப்பகுதியில் கொண்டு விட, பையில் போட்டு எடுத்து
சென்றனர். இதனால் முல்லை நகர் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது.