/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சி வார்டுகளில் அமைச்சர் இன்று குறை கேட்பு
/
கரூர் மாநகராட்சி வார்டுகளில் அமைச்சர் இன்று குறை கேட்பு
கரூர் மாநகராட்சி வார்டுகளில் அமைச்சர் இன்று குறை கேட்பு
கரூர் மாநகராட்சி வார்டுகளில் அமைச்சர் இன்று குறை கேட்பு
ADDED : டிச 01, 2024 01:26 AM
கரூர் மாநகராட்சி வார்டுகளில்
அமைச்சர் இன்று குறை கேட்பு
கரூர், டிச. 1-
கரூர் மாநகராட்சியில், வார்டுகள் தோறும் பொதுமக்கள் குறைகேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
இது குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிக்கை:
கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் வார்டு வாரியாக பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. கரூர் மாநகராட்சியில், 47வது வார்டு கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் காலை, 7.00 மணி, 46வது வார்டு செல்லாண்டிபாளையம் மணி பகவதி அம்மன் கோவிலில் காலை, 7:45 மணி, 45, 46 வார்டுக்குட்பட்ட ராயனுார் பகவதி அம்மன் கோவிலில், 8:30 மணி, 44 வது வார்டு பாரதிதாசன் நகரில், 9:15 மணி, 48 வது வார்டு காளியப்பனுார் மெயின் ரோட்டில், 10:30 மணி, 42வது வார்டு கணபதிபாளையம் கோவில் அருகில், 11:15 மணிக்கு மனுக்களை பெறுகிறோம்.
மேலும், 43 வது வார்டு நான்காம் மண்டல அலுவலகம் அருகில் மதியம், 12:00 மணி, 37வது வார்டு வ.உ.சி. தெருவில், 12:45, 36வது வார்டு திருமாநிலையூர் பழைய பாலத்தில், 1:30, 41வது வார்டு அசோக் நகரில், 3:00, 40 வது வார்டு சக்தி நகர் விளையாட்டு மைதானத்தில், 3:45 மணிக்கும், 39வது வார்டு டி.என்.ஹச்.பி., காலனி ரேஷன் கடை அருகில் மாலை, 4:30 மணி, 15 வது வார்டு நரிக்கட்டியூர் கோவில் அருகில் மாலை, 5:15 மணி, 14வது வார்டு வெள்ளாளப்பட்டி கோவில் அருகில் மாலை, 6:00 மணி, 13 வது வார்டு சணப்பிரட்டியில், 6:45, 16 வது வார்டு இ.பி.,காலனி விளையாட்டு மைதானத்தில், 7:30 மணிக்கு மனுக்களை பெறுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

