/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.பி., தேர்தல் புறக்கணிப்பு போர்டை கிழித்து எடுத்து சென்ற மர்ம நபர்கள்

ADDED : மார் 07, 2024 06:43 AM
கரூர் : கரூர் அருகே, எம்.பி., தேர்தலை புறக்கணிப்பதாக, பொதுமக்கள் வைத்த பிளக்ஸ் போர்டை, மர்ம நபர்கள் கிழித்து எடுத்து சென்றனர்.
கரூர் மாநகராட்சி, 16 வது வார்டு காந்தி கிராமம் கிருஷ்ணா நகர், நான்காவது தெரு மற்றும் குமார் ஸ்டோர் அருகில் சாலை வசதி உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள், வரும் எம்.பி., தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, நேற்று காலை, பிளக்ஸ் போர்டுகளை வைத்தனர்.
சிறிது நேரத்தில், டூவீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள், இரண்டு இடங்களிலும் வைக்கப்பட்ட, பிளக்ஸ் போர்டுகளை கிழித்து எடுத்து சென்று விட்டனர். இதனால், கரூர் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.