/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துணை முதல்வர் திறந்து வைத்த அறிவில் பூங்கா நான்கு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை

ADDED : டிச 09, 2025 05:00 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 'அறி-வியல் பூங்கா'வை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து, நான்கு மாதமாகியும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது அதி-ருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாநக-ராட்சி சார்பில், 'நமக்கு நாமே' திட்டம் மூலம், 5.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அறி-வியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகை, விண்வெளி ஆய்வுகள் சார்ந்த திறனை வளர்த்து கொள்ளும் வகையில், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்-டுபிடிப்புகள், செயல்முறை விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான கண்-டுபிடிப்பு மையம், டைனோசர் போன்ற அரிய விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகர-ணங்கள், திரையரங்கம், ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கட்டப்பட்டுள்-ளன.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூலை, 9ல் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அவர், திறந்து வைத்து, நான்கு மாத-மான நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு வர-வில்லை. மக்கள் யாரும் பயன்படுத்தாமல் அறி-வியல் பூங்கா, வெறும் காட்சி பொருளாக மாறி-விட்டது. விரைவில் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.