/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேவை
/
க.பரமத்தியில் மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேவை
க.பரமத்தியில் மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேவை
க.பரமத்தியில் மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேவை
ADDED : டிச 09, 2025 04:59 AM
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், க.பரமத்தியில், மஞ்சளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ பொருட்களில் ஒன்றாகவும், உணவு பொருட்களில் முக்கிய அங்கமாகவும் இருப்பது மஞ்சள். கரூர் மாவட்-டத்தில் க.பரமத்தி, சின்னம்மநாயக்கனுார், ராஜ-புரம், நம்பகவுண்டனுார், தொக்குப்பட்டி, வெங்-கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.ஓராண்டு பயிரான மஞ்சளை, ஆடி மாதம் விவ-சாயிகள் பயிரிட்டு, 11வது மாதத்தில் அறுவடை செய்வர்.
நாட்டு மஞ்சள் என்ற விரலி மஞ்சள், 8ம் நம்பர், 10ம் நம்பர் என்னும் ஹைபிரிட் மஞ்சள் வகைகள் பயிரிடப்படுகின்றன. இங்கு அறுவடையாகும் மஞ்சள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்கு-முறை விற்பனை கூடம் மற்றும் தனியார் வியா-பாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.
இடைத்தரகர்கள் மூலம் விற்பதால், நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், க.பரமத்தியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மஞ்சள் விவசாயி சரவணன் கூறிய-தாவது:
ஈரோடு, கள்ளக்குறிச்சி பகுதியில் மஞ்சள் அதிக-ளவில் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலான விவ-சாயிகள் போதிய லாபம் இல்லை என கூறி, தற்-போது கரும்பு, வாழை சாகுபடிக்கு மாறி வருகின்-றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மஞ்சள் சாகு-படி அதிகரித்து வருகிறது. இங்கு விளையும் மஞ்-சளை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்தில் விற்கிறோம். ஆனால், அங்கு இடைத்தரகர்கள் தலையீட்டால், போதிய வருவாய் கிடைக்காத நிலை உள்ளது.
எனவே, கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் ஈரோட்டில் உள்ளதுபோல் ஒழுங்குமுறை விற்-பனை கூடம் அமைக்கப்பட்டு, மஞ்சளை கொள்-முதல் செய்தால் வரப்பிரசாதமாக அமையும். மேலும், எங்கள் பகுதிக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் மொத்த வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, அரசு போதிய வழிமுறைகளை வகுத்து கொடுத்தால், விவசாயத்தில் லாபம் கிடைக்கும். தொடர்ந்து மஞ்சள் விவசாயமும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

