/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல்-மோகனுார் பாலத்தில் காட்சி பொருளான கம்பங்கள்
/
வாங்கல்-மோகனுார் பாலத்தில் காட்சி பொருளான கம்பங்கள்
வாங்கல்-மோகனுார் பாலத்தில் காட்சி பொருளான கம்பங்கள்
வாங்கல்-மோகனுார் பாலத்தில் காட்சி பொருளான கம்பங்கள்
ADDED : செப் 28, 2025 08:39 AM
கரூர் : வாங்கல்-மோகனுார் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின் கம்பங்களில், விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாக உள்ளன.
கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த, 2014ல் பிப்ரவரியில், 43 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. அப்போது, பாலத்தில் விளக்குகள் அமைக்காததால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர். மேலும், பாலத்தில் இரவு நேரத்தில் வழிப்பறி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாலத்தின் ஒரு பக்கத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால், அனைத்து மின் கம்பங்களிலும், விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இரவு நேரத்தில் பாலத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர். இதனால், பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, மின் கம்பங்கள் காட்சி பொருளாக உள்ளன. எனவே, வாங்கல்-மோகனுார் உயர்மட்ட பாலத்தில் போடப்பட்ட மின்கம்பங்களில், விளக்குகளை எரிய வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரண்டு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.