/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எள் செடிகளில் களைகள் அகற்றும் பணி மும்முரம்
/
எள் செடிகளில் களைகள் அகற்றும் பணி மும்முரம்
ADDED : செப் 20, 2025 01:49 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் செடிகளின் களைகளை அகற்றும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், வரகூர், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், கந்தன்குடி, பஞ்சப்பட்டி, வீரியபாளையம், கணக்கம்பட்டி பகுதிகளில் மானாவாரி நிலங்களில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால், எள் செடிகள் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்து வருகிறது. எனவே, செடிகள் நன்கு வளர்ச்சி அடையும் வகையில் விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு களைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மானாவாரியாக எள் சாகுபடி, 300 ஏக்கரில் நடந்துள்ளது.