/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே நாடக மேடை திறப்பு
/
அரவக்குறிச்சி அருகே நாடக மேடை திறப்பு
ADDED : மே 29, 2025 01:29 AM
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி அருகே, ராவுத்தம்பட்டி பகுதியில் கட்டப்பட்ட நாடக மேடை திறக்கப்பட்டது.
அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு ஊராட்சி, ராவுத்தம்பட்டி பகுதி யில் நாடக மேடை அமைத்து தர, இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தனது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ராவுத்தம்பட்டியில் நாடக மேடை கட்ட, ஓராண்டுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட நாடக மேடையை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ நேற்று திறந்து வைத்தார். தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.