/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.குறிச்சியில் தெருநாய்களால் அச்சுறுத்தல்
/
அ.குறிச்சியில் தெருநாய்களால் அச்சுறுத்தல்
ADDED : ஜூன் 09, 2025 03:44 AM
அரவக்குறிச்சி: இறைச்சி கடையில் இருந்து வீசப்படும் கழிவுகளை சாப்பிடும் தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு சாலைக்கு வருவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதியில் நுாற்றுக்கும் மேற்-பட்ட இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இறைச்சி கடை-களில் மீதமாகும் கழிவுகளை, ஒருசில கடைக்காரர்கள் முறையாக அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு சில கடைக்கா-ரர்கள், மீதமுள்ள இறைச்சி கழிவுகளை தெருநாய்கள் உண்பதற்-காக வீசி விடுகின்றனர்.இதனால், தினமும் இறைச்சி சாப்பிடும் தெருநாய்களுக்கு வெறி-பிடித்து சாலையில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை அச்சு-றுத்தி வருகிறது. அரவக்குறிச்சி பகுதியில் ஒவ்வொரு தெருக்க-ளிலும் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் பொதுமக்களை அச்சு-றுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. மேலும், ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு சாலைக்கு வருவதால் விபத்து ஏற்படுகி-றது. இதேபோல், பள்ளப்பட்டி பகுதியில் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை கடித்து குதறியது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வாரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார். எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, இறைச்சி கடைகளை ஓரிடத்தில் அமைத்து அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்