/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு
/
போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு
ADDED : நவ 19, 2024 01:48 AM
போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு
கரூர், நவ. 19-
கரூர் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமை வகித்தார். சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம், நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன், தங்களது உயிரை பாதுகாக்க, ஹெல்மெட் அணிதல் வேண்டும். பெரும்பாலான விபத்துகள் தலையில் காயம் காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறது.
ஹெல்மெட் அணிந்தால் உங்கள் உயிரை பாதுகாக்க முடியும். தங்களது இருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு ஆவணம், வாகனத்திற்கான பதிவு ஆவணம், ஓட்டுனர் உரிமம் என அனைத்து விதமான ஆவணங்களின் நகல்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., சக்திவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.

