/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரத்து அதிகரிப்பால் உருளை கிழங்கு விலை குறைவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

ADDED : அக் 23, 2024 07:26 AM
கரூர்: வரத்து அதிகரிப்பால், உருளை கிழங்கு விலை குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உருளை கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்படும் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவ மழை காரணமாக, நடப்பாண்டு உருளை கிழங்கு தோட்டங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உருளை கிழங்கு சாகுபடி செய்யப்படும் கொடைக்கானல், ஊட்டியிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு உருளை கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்துக்கு, நாள்தோறும் ஐந்து லாரிகளில் உருளை கிழங்கு வரத்தாகும்.
தற்போது, 10 லாரிகளில் வரத்தாகிறது. கடந்த செப்டம்பரில் ஒரு கிலோ உருளை கிழங்கு, 80 முதல், 90 ரூபாய் வரை விற்றது. தற்போது, 50 முதல், 60 ரூபாய் வரை விற்கிறது. வரும், 31ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், உருளை கிழங்கு விலை குறைந்துள்ளதால், சிப்ஸ், சமோசா உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரிக்க, இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்தனர்.