/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லைசிறுவன் உள்பட இருவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லைசிறுவன் உள்பட இருவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லைசிறுவன் உள்பட இருவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லைசிறுவன் உள்பட இருவர் கைது
ADDED : ஜன 04, 2025 01:15 AM
கரூர், ஜன. 4-
கரூர் அருகே, பாசன வாய்க்காலில் குளித்து விட்டு, வீட்டுக்கு சென்ற பள்ளி சிறுமியை வழி மறித்து, பாலியல் தொல்லை கொடுத்த, சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புகழூரை சேர்ந்த மணி என்பவரது மகன் லிங்கேஸ்வரன், 24. இவர் நேற்று முன்தினம் மதியம், 15 வயது சிறுவனுடன் காவிரியாற்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது, காவிரியாற்றின் பாசன கிளை வாய்க்காலில் குளித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பினர்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, லிங்கேஸ்வரன் மற்றும் 15 வயது சிறுவனை, கரூர் ரூரல் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.