ADDED : ஜூன் 04, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த பொருந்தலுார் பஞ்., அப்பா நாயக்கனுார் கிராமத்தை சேர்ந்தவர்
மாரியப்பன், 40, சலவை தொழிலாளி. இவரது மகன் ஐயப்பன், 14, அண்ணன் மகன்
கோகுல்பாரத், 15, ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கோடை
விடுமுறையில் வீட்டில் இருந்த இருவரும், கடந்த மாதம் 29ம் தேதி மாலை
4:00 மணியளவில் சின்னரெட்டிபெட்டியில் உள்ள கடையில் டீ குடித்து
விட்டு வருவதாக கூறிச் சென்ற இருவரும் இதுவரை வரவில்லை. பல இடங்களில்
தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து, பள்ளி சிறுவர்களை தேடி வருகின்றனர்.
