/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இருசக்கர விற்பனை நிறுவனத்தால் மனஉளைச்சல் பெண்ணுக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்க உத்தரவு

ADDED : டிச 25, 2024 02:27 AM
கரூர், டிச. 25-
கரூரில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கரவாகனத்துக்கு, முறையாக சர்வீஸ் செய்து தராததால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகள் சாந்தி,30. இவர் கடந்த, 2022 ல் அக்., மாதம் கரூரில் உள்ள தனியார் டூவீலர் விற்பனை நிறுவனத்தில், 78 ஆயிரத்து, 130 ரூபாய் செலுத்தி, புதிதாக டி.வி.எஸ்., ஸ்கூட்டி இரு சக்கர வாகனத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.
மேற்படி நிறுவனத்தில் பல முறை சர்வீஸ் செய்த பிறகும், புதிதாக வாங்கப்பட்ட இரு சக்கரவாகனம் சரியாக இயங்கவில்லை.
இதனால், ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 78 ஆயிரத்து, 130 ரூபாயை, 12 சதவீத வட்டியுடன் டூவீலர் நிறுவனம், தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சாந்தி, கடந்த, 5 ல் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நுகர்வோர் ஆணைய தலைவர் பாரி, உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர், இருசக்கர வாகனத்தை சரிவர சர்வீஸ் செய்து கொடுக்காததால், சாந்திக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, கரூர் தனியார் இருசக்கர விற்பனை நிறுவனம், 55 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, நேற்று உத்தரவிட்டனர்.