/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகை திருட்டு புகாரால் பஸ்சில் சோதனை சிக்கியதோ குட்கா கடத்தி வந்த 2 பெண்கள்
/
நகை திருட்டு புகாரால் பஸ்சில் சோதனை சிக்கியதோ குட்கா கடத்தி வந்த 2 பெண்கள்
நகை திருட்டு புகாரால் பஸ்சில் சோதனை சிக்கியதோ குட்கா கடத்தி வந்த 2 பெண்கள்
நகை திருட்டு புகாரால் பஸ்சில் சோதனை சிக்கியதோ குட்கா கடத்தி வந்த 2 பெண்கள்
ADDED : ஜூன் 11, 2025 02:27 AM
சத்தியமங்கலம், 'எந்தப் புத்துல எந்த பாம்போ' என்னும் வகையில்தான், சமீபகாலமாக பல நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அதேசமயம் 'காக்கா உட்கார பனம்பழம்' விழுந்த கதையாக, சில சம்பவங்களும் நடந்து, 'வியப்புக்கு நாங்கள் எப்போதும் கியாரன்டி' என்கிறது இந்தக்காலம். அப்படி ஒரு சிக்கலான சம்பவம்தான் இது.
கர்நாடக மாநிலம் மடிகேரியிலிருந்து, 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கர்நாடக மாநில அரசு பஸ் கோவைக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. சாம்ராஜ் நகரில் சித்ரா என்ற பெண், புன்செய்புளியம்பட்டிக்கு செல்ல ஏறினார். மாலையில் ஆசனுார் அருகே டீ குடிக்க பஸ் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. டீ குடித்து விட்டு மீண்டும் பஸ்சில் ஏறிய சித்ரா, கழுத்தில் போட்டிருந்த, 8 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்று கண்டக்டரிடம் புகார் செய்தார். இதனால் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. சத்தி ஸ்டேஷன் அருகில் பஸ்சை நிறுத்தி, பயணிகளிடம் சோதனை நடந்தது. அப்போது திருட்டு போனதாக கூறப்பட்ட நகை கிடைக்கவில்லை. ஆனால், கோபியை சேர்ந்த வசந்தாமணி, 48, புவனேஸ்வரி, 45, என இரண்டு பெண்கள் சிக்கினர். அவர்கள் வைத்திருந்த பையில், 20 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா புகையிலை பொருள் இருந்தது. விற்பனைக்காக கடத்தி செல்வது தெரிய வந்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் எதற்கு, எப்படி நடந்தது? என்ற கேள்விதான், முதல் பாராவில் புகுந்து புறப்பட்ட கேள்விக்கணைகள்.