/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் துார்வாரப்படாததால் நோய் பரவும் அபாயம்

ADDED : செப் 29, 2024 01:17 AM
வாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்
துார்வாரப்படாததால் நோய் பரவும் அபாயம்
கரூர், செப். 29--
கரூர் அருகே செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து பாசன பகுதிகளில், பல்வேறு வாய்க்கால்கள் செல்கின்றன. இதன் மூலம், 4,500 ஏக்கர் சாகுபடி நடந்து வருகிறது. செல்லாண்டிபாளையம், திருக்காம்புலியூர், குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம், பாலம்மாள்புரம், அரசுகாலனி ஆகிய பகுதிகள், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறுகிறது.
செல்லாண்டிபாளையம் வழியாக செல்லும் வாய்க்கால் பல ஆண்டுகளாக முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால் முற்றிலும் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. அதில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் நிரம்பி கிடக்கின்றன. கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. வாய்க்காலை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்த வாய்க்காலில் உள்ள திடக்கழிவுகளை அகற்ற வேண்டும் துார்வார வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.