/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே திறக்கப்படாத புறக்காவல் நிலையம்
/
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே திறக்கப்படாத புறக்காவல் நிலையம்
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே திறக்கப்படாத புறக்காவல் நிலையம்
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே திறக்கப்படாத புறக்காவல் நிலையம்
ADDED : நவ 21, 2024 01:37 AM
கரூர், நவ. 21-
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, புறக்காவல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்டில் திருட்டு உள்ளிட்ட, சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பொது மக்கள், புகார் தர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனின், புறக்காவல் நிலையம், கரூர் பஸ் ஸ்டாண்டில் வணிக வளாக கட்டிடத்தில் இருந்தது. அந்த வணிக வளாக கட்டிடம், சேதம் அடைந்த காரணத்தால் இடிக்கப்பட்டது. புறக்காவல் நிலைய போலீசார், அரசு போக்கு வரத்து கழக அலுவலகத்தில், தற்காலிகமாக அமர்ந்திருந்தனர். இந்நிலையில், ஒரு லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், கன்டெய்னர் மாதிரி வடிவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, கோவை சாலையில், மனோகரா கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டது. அதில், பணியாற்றும் போலீசாருக்கு, கழிப்பிட வசதியும், ஏ.சி., வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புறக்காவல் நிலையத்தில், போலீசார் இருப்பதில்லை. எப்போதும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், கரூர் பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, மனோகரா கார்னர் மற்றும் ஜவஹர் பஜார் பகுதியில், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்ட, பொதுமக்கள் புகார் கொடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலையில் அமைக்கப்பட்டுள்ள, புறக்காவல் நிலையத்தை, நாள்தோறும் திறந்து வைத்து, போலீசாரை பணியில் அமர்த்த எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.