sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை விசாகா கமிட்டி விசாரணை

/

பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை விசாகா கமிட்டி விசாரணை

பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை விசாகா கமிட்டி விசாரணை

பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை விசாகா கமிட்டி விசாரணை


ADDED : செப் 23, 2024 04:33 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பெண் பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக, விசாகா கமிட்டி விசாரணையை தொடங்கியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர், 25 வயது பெண் பயிற்சி டாக்டர். இவர், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பயிற்-சியில் ஈடுபட்டு வருகிறார். அதே கல்லுாரியில் பணிபுரியும் திண்-டுக்கல்லை சேர்ந்த, 45 வயது அறுவை சிகிச்சை உதவி மருத்-துவர், சில நாட்களுக்கு முன், பாலியல் தொல்லை கொடுத்ததாக, பயிற்சி டாக்டர், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார்.இதையடுத்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, விசாகா கமிட்டியில் உள்ள, 2 மருத்துவர்கள், 3 அதிகாரிகள் அடங்கிய, 5 பேர் கொண்ட குழுவினர், விசாரணையை, நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் ராஜா (பொ) கூறுகையில், ''அறுவை சிகிச்சை உதவி மருத்-துவர் மீது, பெண் பயிற்சி மருத்துவர் கொடுத்த பாலியல் புகாரை, விசாகா கமிட்டியினர் விசாரித்து வருகின்றனர். விசா-ரணை அறிக்கை வந்த பிறகே, முழுமையான தகவல்களை

கூற முடியும்,'' என்றார்.

கடந்த மே மாதமும் இதே புகார்

கடந்த மே மாதம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் பணியாற்றிய, 25 வயதுடைய பெண் பயிற்சி டாக்டர் ஒருவர், மதுரையை சேர்ந்த ஆண் பயிற்சி டாக்டர் ஒருவர், திரு-மணம் செய்து கொள்வதாக கூறி, தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்தார். இதுகுறித்து, கரூர் மகளிர் போலீசார், ஆண் பயிற்சி டாக்டர் ராஜேஷ்வரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us